அமெரிக்காவில் 50 மில்லியன் பேருக்கு தடுப்பூசி விநியோகம்

அமெரிக்காவில் 50 மில்லியன் பேருக்கு கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பதவியேற்ற முதல் 100 நாட்களுக்குள் 100 மில்லியன் பேருக்குத் தடுப்பூசி போட உறுதி கூறியிருந்தார். பின்னர் 150 மில்லியன் பேருக்குத் தடுப்பூசி போட அவர் இலக்கை வகுத்தார்.

தடுப்பூசிகள் பற்றி அமெரிக்கர்களுக்குக் கற்றுக்கொடுக்க பெரிய அளவிலான இயக்கத்தைத் ஆரம்பித்திருப்பதாக பைடன் கூறியுள்ளார். தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்றும் செயல்திறன்மிக்கவை என்றும் அவர் கூறினார்.

தடுப்பூசித் திட்டம் விரைவுபடுத்தப்படுவதால் அமெரிக்கா ஓய்வெடுக்க இயலாது என்று பைடன் தெரிவித்தார்.

கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் ஆகிய நடவடிக்கைகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

 

Sat, 02/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை