அலட்சியம் செய்தால் 3ஆம் அலையை தவிர்க்க முடியாது

வேகமாக பரவக்கூடிய புதிய வகை வைரஸ் தொற்றாளர்கள் இருவர் கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் மக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றுவதை அலட்சியப்படுத்தினால் கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்வது தவிர்க்க முடியாததாகிவிடும் என மாநகரசபையின் பிரதம மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேற்படி தொற்றாளர்கள் இருவரும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போதே இனங்காணப்பட்டுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து அவர்களோடு நெருக்கமான தொடர்புகளை கொண்டவர்களுக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மக்கள் கூடும் இடத்தை தவிர்த்துக் கொள்ளுமாறும் அதேபோன்று சுற்றுலா ப்பயணிகள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் மக்கள் கூடும் நிகழ்வுகளை மட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.(ஸ)

(லோரன்ஸ் செல்வநாயகம்)

Wed, 02/17/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை