அனைத்து 30 - 60 வயதுக்குட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி

அனைத்து 30 - 60 வயதுக்குட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி-30-60 Year Old will Vaccinated From March 1st Week-Sudarshani Fernandopulle

நாட்டில் இதுவரை 161,773 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது

எதிர்வரும் மார்ச் முதல் வாரத்தில் இருந்து 30 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி வழங்கப்படும் என, ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோய் மற்றும் கொவிட் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் இராஜாங்க  அமைச்சர் சுதர்ஷனி பெனாண்டோபுள்ளே தெரிவித்தார்.

இதற்காக நாடு முழுவதும் 4,000 மையங்கள் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

நாளொன்றில் 2,000 மையங்களை செயற்படும் வகையில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நோய் தொற்றக்கூடிய பிரிவிற்குள் காணப்படும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதற்கு அமைய,  குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஜனவரி 29ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் தடுப்பூசி திட்டத்தின் கீழ், கடந்த 10 நாட்களில் 161,773 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்ப்பட்டுள்ளதாக, தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது. நேற்றையதினம் (07) 1,625 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Mon, 02/08/2021 - 12:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை