சோளப் பயிர்ச்செய்கையை மேம்படுத்த 2,750 ஏக்கர் மஹாவலி காணியை குத்தகைக்கு வழங்க அரசு முடிவு

அந்நிய செலாவணி வெளிநாடுகளுக்கு தேவையற்ற விதத்தில் இழுத்துச் செல்லப்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டில் பயிரிடக் கூடியதென அடையாளம் காணப்பட்டுள்ள உணவுப் பயிர்களின் இறக்குமதியை மட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய, சோளம் இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், திரிபோஷா மற்றும் கால்நடைகளுக்கான உணவு உற்பத்திகளுக்கு தேவையான 2,50,000 மெற்றிக் தொன் சோளம் உள்ளூரில் உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

அதற்கமைய, சோளப் பயிர்ச்செய்கையை பாரியளவில் மேற்கொள்வதற்காக உள்ளூர் விவசாய முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இலங்கை மஹாவலி அதிகாரசபையின் கீழ் காணப்படும் இரம்பகன் ஓயா வலயத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்கு சொந்தமில்லாத, குறைப்பயன்பாட்டிலுள்ள 2,750 ஏக்கர்களை இந்த முதலீட்டாளர்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, இனங்காணப்பட்ட உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு ஒருவருட (01) கால குத்தகை அடிப்படையில் இக் காணிகளை வேறுபிரித்து வழங்குவதற்கும், பயிர்ச்செய்கையின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் காலங்களில் அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் நீண்டகாலக் குத்தகையின் அடிப்படையில் குறித்த முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Wed, 02/03/2021 - 12:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை