உலக கொரோனா உயிரிழப்பு 2.5 மில்லியனைத் தாண்டியது

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2.5 மில்லியனைத் தாண்டியுள்ளது.

ஐரோப்பா, தென்னமெரிக்கா, கரீபியன் வட்டாரம் ஆகிய இடங்களில் மிக அதிகமான மரணங்கள் நேர்ந்துள்ளதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்தது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி அன்று வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டியது. அதற்கு பின்னர் 4 மாதங்களில், மேலும் ஒரு மில்லியன் பேர் நோயால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த மாதம் 15 ஆம் திகதி அன்று வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 மில்லியனை எட்டியது.

இருப்பினும், கடந்த மாதப் பிற்பாதியிலிருந்து பதிவாகும் சராசரி மரணங்கள் குறைந்துவருவதாக ஏ.எப்.பி குறிப்பிட்டது. நாளொன்றுக்குச் சராசரியாக 9,500 பேர் பெருந்தொற்றால் மரணமடைவதாகக் கூறப்பட்டது.

ஜனவரி மாதத்தில் வைரஸ் பரவல் மோசமாக இருந்த வேளையில், நாளொன்றுக்கு சராசரியாக 14,500 பேர் உயிரிழந்தனர்.

உலகம் முழுவதும் 112 மில்லியனுக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

 

Sat, 02/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை