மொரோக்கோவில் தொழிற்சாலை வெள்ளத்தில் மூழ்கி 24 பேர் பலி

மொரோக்கொவில் சட்டவிரோதமாக இயங்கிவந்த நிலத்தடி புடவைத் தொழிற்சாலை ஒன்றில் கடும் மழையால் நீர் நிரம்பியத்தில் 24இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். டங்கீர் நகரில் இருக்கும் வீடொன்றின் அடித்தளத்தில் அமைந்திருக்கும் இந்தத் தொழிற்சாலையில் இருந்து மேலும் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். வெள்ள நீர் நிரம்பும்போது அந்தக் கட்டடத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது தெரியவில்லை. கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட இந்த அனர்த்தத்தை அடுத்து தொடர்ந்து மீட்பாளர்கள் அங்கு தேடுதலில் ஈடுபட்டு வருவதோடு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் அந்தத் தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது வெள்ள நீர் அந்தக் கட்டடத்தை மூழ்கடிக்கச் செய்திருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதில் 20 மற்றும் 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே உயிரிழந்துள்ளனர். அண்மைய வாரங்களில் மொரோக்கோவில் கடும் மழை பெய்து வருகிறது. தடைப்பட்ட அல்லது மோசமாக பராமரிக்கப்படும் வடிகான்கள் காரணமாக நகரங்களில் வெள்ளம் மோசமாக பாதிப்பை ஏற்படுத்துகிறது.

Wed, 02/10/2021 - 08:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை