பிரிட்டனில் தடுப்பு மருந்து பெற்ற 236 பேர் உயிரிழப்பு

பிரிட்டனில் பைசர் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை எடுத்துக்கொண்ட 236 பேர் ஒவ்வாமை உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு மருந்து மற்றும் சுகாதார ஒழுங்குபடுத்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்த கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்ட 90 பேரும் மரணமடைந்துள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் வயதானவர்கள் என்றும், கொரோனா தடுப்பூசியால்தான் உயிரிழந்தனரா என்பது உறுதியாகவில்லை என்றும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனில் தற்போதுவரை சுமார் 10 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதில் 7.1 மில்லியன் பைசர் தடுப்பு மருந்துகள் போடப்பட்டிருப்பதோடு 3 மில்லியன் ஒக்ஸ்போர்ட் தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிரிட்டன் பெப்ரவரி 15 ஆம் திகதிக்குள் 15 மில்லியன் முதல் கட்ட தடுப்பு மருந்துகளை வழங்க இலக்கு வைத்துள்ளது. இந்த இலக்கை எட்டுவதென்றால் அது சராவரியாக ஒவ்வொரு நாளும் 375,723 தடுப்பு மருந்துகளை செலுத்த வேண்டி உள்ளது.

Sun, 02/14/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை