கொவிட்-19: உலகை எச்சரித்த மருத்துவருக்கு நினைவஞ்சலி

கொவிட்–19 தொற்றைப் பற்றி முதலில் எச்சரிக்கை விடுத்த மருத்துவருக்கு என்றும் கடமைப்பட்டிருப்பதாக சீனாவின் வூஹான் நகர குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வைரஸ் தொற்று அடையாளம் காணப்படும் முன்னரே அதுகுறித்து எச்சரித்தார் கண் மருத்துவர் லீ வென்லியாங். நோய்த்தொற்றைப்பற்றி வதந்திகள் பரவுவதாக பொலிஸாரால் முதலில் கண்டிக்கப்பட்டார் லீ.

34 வயது மருத்துவர் கடந்த ஆண்டு பெப்ரவரி 7ஆம் திகதி நோய்த் தொற்றால் காலமானார். அவரின் மரணத்தைத் தொடர்ந்து பலர் ஆழ்ந்த துக்கத்தை வெளிப்படுத்தினர். இணையத்தில் பலர் தங்கள் கோபத்தையும் வெளிப்படுத்தினர்.

‘சீனாவின் வீரர்’ என்று நோய்ப்பரவல் நிபுணர் ஒருவரால் பெயர்சூட்டப்பட்டார் லீ.

ஆனால் அரசாங்கம் நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடியவர்களை அங்கீகரித்தபோதும் லீயை அந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை.

வூஹான் நகரில் வாழ்க்கை கிட்டத்தட்ட வழக்கநிலைக்குத் திரும்பினாலும் மக்கள் லீயின் செயல்களை நினைவுகூர்ந்து வருகின்றனர்.

Mon, 02/08/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை