கொங்கோ கிராமத்தில் தாக்குதல்: 16 பேர் பலி

கொங்கோவின் வடகிழக்கு மாகாணமான இட்டுரியில் கிராமம் ஒன்றின் மீது இஸ்லாமியவாதிகள் என சந்தேகிக்கப்படும் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் மூன்று படையினர் மற்றும் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதோடு கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று தீமூட்டப்பட்டுள்ளது.

புனியா நகருக்கு தெற்காக சுமார் 100 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் இந்த கிராமத்திற்குள் நுழைந்த தாக்குதல்தாரிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி இருப்பதாக கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலை யார் நடத்தினார்கள் என்பது உறுதியாகாதபோதும் 1990கள் தொடக்கம் கிழக்குக் கொங்கொவில் செயற்பட்டு வரும் உகண்டா ஆயுதக் குழுவான கூட்டணி ஜனநாயகப் படை மீது சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டில் இந்தக் குழு சுமார் 850 பேரை கொன்றிருப்பதாக ஐ.நா தரவுகள் குறிப்பிட்டுள்ளன.

உகண்டா, ருவாண்டா மற்றும் புருண்டி நாடுகளுடனான கொங்கோவின் கிழக்கு எல்லைப் பகுதியில் 100க்கும் அதிகமான போராட்டக் குழுக்கள் இயங்கி வருகின்றன.

Tue, 02/16/2021 - 11:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை