உலக கொரோனா தொற்று 111 மில்லியனைத் தொட்டது

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 111 மில்லியனைத் தாண்டியுள்ளது. நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2.5 மில்லியனை நெருங்கியுள்ளது.

ஐந்தில் ஒரு பங்கு மரணங்கள் அமெரிக்காவில் நேர்ந்தன. உலகிலேயே மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் உயிரிழப்பு எண்ணிக்கை 500,000ஐ நெருங்கியுள்ளது.

எனினும், கடந்த இரண்டு வாரங்களாக அங்கு புதிதாய்ப் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை 44 வீதம் குறைந்ததாக நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இதன்படி உயிரிழப்பு எண்ணிக்கை 35 வீதம் குறைந்துள்ளது.

பாதுகாப்பு இடைவெளி, முகக்கவசம் அணிவது போன்ற நடவடிக்கைகளுடன், அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட தடுப்பூசி போடும் பணிகளும் அதற்குக் காரணமாகக் கருதப்படுகின்றன.

அமெரிக்க மக்கள் தொகையில் 13 வீதத்தினருக்கு தற்போது ஒருமுறையாவது தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

உலக அளவில் 100க்கும் அதிகமான நாடுகள் மற்றும் ஆட்புலங்களில் சுமார் 200 மில்லியன் கொரோனா தடுப்பு மருந்துகள் போடப்பட்டுள்ளன.

இதில் உலக மக்கள் தொகையில் வெறுமனே 10 வீதமாக இருக்கும் ஜி7 நாடுகளில் 45 வீதமான தடுப்பு மருந்து பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Tue, 02/23/2021 - 14:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை