ரூ.1,000 சம்பளம் கோரி இ.தொ.காவின் பொதுப் பகிஷ்கரிப்பு வெற்றி முடங்கியது மலையகம்

ஹற்றன் சுழற்சி, ஹற்றன் விசேட, தலவாக்கலை குறூப் நிருபர்கள்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை நாட் சம்பளத்தை 1,000 ரூபாவாக வழங்கப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தி பெருந்தோட்ட கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நேற்று (05) முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்பு மற்றும் பொதுப் பகிஷ்கரிப்பு நடவடிக்கை எந்தவோர் அசம்பாவிதங்களுமின்றி நாடு முழுவதும் அமைதியாக நடைபெற்றது.

இந்த முடக்கத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்தாலும் இம் முடக்கத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க காங்கிரஸ் அனைத்து தரப்பினர்களிடத்திலும் பொதுவான ஆதரவை வழங்கக் கோரி பொது அழைப்பும் விடுத்திருந்தது.

இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட போதிலும் இது தோட்ட தொழிலாளர்களுக்கு முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கை என்பதால் பலர், தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து முடக்க நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மலையக பிரதேசங்களில் 95% விகிதமானோர் கடையடைப்பு மற்றும் பணிப் பகிஷ்கரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

நுவரெலியா மாவட்டம் இந்த முடக்க நடவடிக்கையால் ஸ்தம்பிதமடைந்துள்ளது. அதேநேரத்தில் ஆசிரியர் சங்கங்கள் இம் முடக்கத்திற்கு வலு சேர்த்திருக்கும் நிலையில் தமிழ், சிங்கள பாடசாலைகளும் முடக்கத்திற்கு

 

Sat, 02/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை