அமெரிக்காவில் 100 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் பனிப்பொழிவு காரணமாக நெடுஞ்சாலை ஒன்றில் சுமார் 100 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் ஆறு பேர் உயிரிழந்திருப்பதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

போர்ட் வேர்த் நகரின் வடக்கே உள்ள பரபரப்பான நெடுஞ்சாலையில் கடந்த வியாழக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பனிச் சூழல் இந்த விபத்துக்குக் காரணமாக இருந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்போது ஆறு பேர் உயிரிழந்ததாகவும் மேலும் 36 பேர் உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் போர்ட் வேர்த் தீயணைப்புத் திணைக்கள பேச்சாளர் மைக்கல் ட்ரிவ்டால் தெரிவித்துள்ளார்.

விபத்து இடம்பெற்ற பகுதியில் கார்கள் மற்றும் டிரக் வண்டிகள் ஒன்றோடொன்று மோதி குவியலாக இருக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. இதில் சில வாகனங்கள் மற்ற வாகனங்களின் மேல் இருந்தன. இதனால் வாகனங்களுக்கு சிக்கி இருப்பவர்களை வெளியே எடுத்து வருவதற்கு சிறிது காலம் எடுத்துக் கொண்டதாக மீட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Sat, 02/13/2021 - 15:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை