மேலும் 10 மரணங்கள்; இதுவரை 445 கொரோனா மரணங்கள் பதிவு

மேலும் 10 மரணங்கள்; இதுவரை 445 கொரோனா மரணங்கள் பதிவு-10 More COVID19 Related Deaths Reported-Increasing Total Deaths in SL to 445

- 7 ஆண்கள், 3 பெண்கள்
- வயதுகள்: 74, 82, 58,72, 65,68, 68,83, 90,72
- இடங்கள்: கொலன்னாவை, வெள்ளவத்தை, களுத்துறை, வஸ்கடுவ, பிபிலை, குருத்தலாவை, பிட்டகோட்டே, குடாகல்கமுவ, இரத்மலானை, ஹட்டன்

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 10 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தற்போது (21) அறிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்கனவே 435 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 10 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 445 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

இவ்வாறு அறிவிக்கப்பட்டவர்களில் இருவர் இன்றும் (21), மூவர் நேற்றும் (20), இருவர் நேற்று முன்தினமும் (19), கடந்த பெப்ரவரி 16 ஆம் திகதி இருவரும், பெப்ரவரி 14ஆம் திகதி ஒருவரும் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Sun, 02/21/2021 - 22:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை