பொதுவான பொறிமுறைகளுடன் PCR, அன்டிஜன் பரிசோதனைகள் இனி தனியார் ஆஸ்பத்திரிகளிலும்

- இராணுத் தளபதியுடனான சந்திப்பில் இணக்கம் 

பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை நடத்துவதற்கான பொதுவான ஒழுங்குமுறை பொறிமுறையை அமுல்படுத்துதல், இலங்கை முதலீட்டுச் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலை

ஊழியர்கள், வெளிநாடுகளுக்குச் செல்வோர், அந்தந்த மருத்துவமனைகளில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுபவர்களுக்கு இதுபோன்ற நடைமுறைகளின் 100%நம்பகத்தன்மையை ஒழுங்குபடுத்துவதற்கும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி அ​வற்றை முன்னெடுப்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான கொவிட் 19பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் விஷேட மருத்துவ நிபுணரும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமுமான வைத்தியர் அசேல குணவர்தன ஆகியோர் தலைமையில், தனியார் துறையின் உயர் தொழில்நுட்ப ஆய்வு கூட முகாமையாளர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

"அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் சோதனைகளுக்கு வருபவர்களை அவர்களின் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு காத்திருக்கும் இடத்தில் தனிமைப்படுத்தி வைப்பது தனியார் துறையின் கடமையாகும், ஆனால் அவ்வாறு நடப்பதில்லை என்றும் தொற்று உறுதிப்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் குறித்து சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படுவதில்லையென புகார்கள் கிடைக்கப்பட்டுள்ளன.

சில தனியார் வைத்தியசாலைகள் அமைச்சிடமிருந்து எந்த அனுமதியையும் பெறாத பிராந்திய மற்றும் மினி ஆய்வு கூங்களிலும் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்கின்றன. இவ்வாறான நடவடிக்கைகள் தொற்று பரவலுக்கு எதிரான எங்கள் போராட்டத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் இவற்றில் தொற்று உறுதியானவர்கள் வைத்தியசாலைகளில் மட்டுப்படுத்தாமல் வைரஸ் தொற்றக் கூடிய பல்வேறு இடங்களில் மறைந்து கொள்கின்றனரென ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறினார்.

நீங்கள் அனைவரும் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் சோதனைகளுக்கு வெவ்வேறு தொகைகளை அறவிடுகிறீர்கள் என்றும் புகார்கள் கிடைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற சோதனைகளை மேற்கொள்ள தொழில்நுட்ப ரீதியாக பொருத்தப்பட்ட 30ஆய்வு கூடங்கள் மட்டுமே சுகாதாரத் துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்றும் சில பாதிக்கப்பட்ட தரப்பினரால் இதுபோன்ற சோதனைகளின் நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து கவலைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்பதோடு சில நேரங்களில் முரண்பாடான முடிவுகள் கிடைத்துள்​ளமை பற்றியும் ஆராயப்பட்டது.

அதேநேரம் ​நேற்று முன்தினம் மட்டும், 18,000பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ள போதும், தனியார் துறை கட்டணம், அதாவது முதலீட்டுச் சபை நிறுவன ஊழியர்களுக்கு ரூபாய் 6,750என்ற கட்டண அறவீடு மாறாமல் உள்ளது.

இதுபோன்ற சோதனைகளுக்கான தற்போதைய கட்டண வரம்புகளை மக்களின் நலனுக்காக மேலும் குறைக்க முடிந்தால் அது மிகவும் நல்லது என்று சுட்டிக்காட்டிய ஜெனரல் ஷவேந்திர சில்வா, வழங்கப்பட்ட அதிகாரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

அதேநேரம் உக்ேரனிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பரிச்சார்த்த திட்டமாக தனியார் துறை மருத்துவமனைகளுக்கு பி.சி.ஆர் சோதனைகளை நடத்த சுகாதார அதிகாரிகள் அனுமதி அளித்ததாகவும் அவர் கூட்டத்தில் தெரிவித்தார்.

வைத்தியர் அசேல குணவர்தன அந்த தொழில்நுட்ப வல்லுநர்களிடம் இந்த நடைமுறைக்கான வழிகாட்டுதல்களையும் விதிமுறைகளையும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தவறான நடைமுறைகளை நாடாமல் சோதனை முறையின் நம்பகத்தன்மையை மிக உயர்ந்த மட்டத்தில் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் சுகாதார அமைச்சு, சுகாதார திணைக்களம் மற்றும் அரச வைத்தியசாலை உயர் மட்ட அதிகாரிகள், பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பல நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ராஜகிரிய கொவிட்19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில் 10-12 ஆய்வு கூட அதிகாரிகள், தனியார் வைத்தியசாலை நிர்வாகிகள் குழுவும் கலந்து கொண்டனர்.

Fri, 01/22/2021 - 10:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை