சுயதனிமைப்படுத்தலில் GMOA சங்கத் தலைவர்

கொரோனா தொற்றுள்ளவருடன் நெருங்கிப் பழகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அனுருத்த பாதெனிய சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர்,  விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அனுருத்த பாதெனிய இதனைத் உறுதிப்படுத்தியுள்ளார்.

அவரின் வீட்டில் அண்மையில் நடைபெற்ற விருந்துபசார வைபவமொன்றில் கலந்து கொண்ட வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பாதெனிய அந்த தொற்றுள்ளவருடன் நெருங்கிப்பழகியவராக அடையாளம் காணப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அவரை தனிமைப்படுத்துவதற்காக அவரின் வீட்டிற்கு பொதுச் சுகாதார பரிசோதகர் சென்ற போதும் வீட்டில் எவரும் இருக்கவில்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sat, 01/16/2021 - 07:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை