அதிகஷ்டப் பிரதேச ஆசிரியர்கள் இடமாற்றம் கோரி ஆர்ப்பாட்டம்

அதிகஷ்டப் பிரதேசங்களில் பணியாற்றிய ஆசிரியர்கள் தமக்கு இடமாற்றம் வழங்க கோரி வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக நேற்று (04) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகஷ்டப் பிரதேசங்களில் 3 வருடங்கள் கடமையாற்றினால் போதும் என்றவர்கள் இன்று 6 வருடங்கள் கடந்தும் எமக்கான இடமாற்றங்கள் வழங்கவில்லை.

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உட்பட பல தரப்பினரிடமும் எமது கோரிக்கைகளை முன்வைத்த போதும், யாருமே சரியான தீர்வைப் பெற்றுத்தரவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்கள். 

வடமாகாண ஆளுநரை சந்தித்து தமது கோரிக்கையை முன்வைக்க வருகை தந்திருந்த போது, ஆளுநரை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும், ஆளுநரின் செயலாளரை சந்தித்து தமது பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்ததாகவும் தெரிவித்தனர்.

6 வருடங்கள் தாண்டியும், இந்த கொரோனா காலப்பகுதியிலும், அதிகஷடப் பிரதேசங்களுக்கு சென்று, தாம் பணியாற்றியதாகவும், பல முறை இடமாற்றம் தொடர்பில் கல்வி வலயம் உட்பட கல்வி அமைச்சின் செயலாளர்களை சந்தித்து கலந்துரையாடிய போது, பல வாக்குறுதிகளை தந்ததாகவும், அந்த வாக்குறுதிகளை இன்று வரை நிறைவேற்றவில்லை என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

Tue, 01/05/2021 - 13:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை