உலகச் செல்வந்தர்களின் சொத்து மதிப்பு அதிகரிப்பு

கொவிட்–19 பொருந்தொற்றுக் காரணமாக அமசோனின் ஜெப் பெசொஸ் மற்றும் டெஸ்லா நிறுவனர் அலன் மஸ்க் உட்பட உலகின் பெரும் செல்வந்தர்களின் செல்வம் அதிகரித்திருக்கும் நிலையில் ஏழைகள் நெருக்கடிக்கு முகம்கொடுத்திருப்பதாக தொண்டு நிறுவனமான ஒக்ஸ்பாம் தெரிவித்துள்ளது.

இந்த ஏற்றத்தாழ்வை முறியடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படி அரசுகளை அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

கொவிட்–19 நிலைமையால் பெண்கள் ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுப்பதோடு கீழ்நிலை தொழிலாளர்கள் தொழில் இழப்புகளுக்கு முகம்கொடுத்துள்ளனர். 100 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கடும் வறுமை நிலைக்குள் சிக்கிவிடுவார்கள் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது.

மறுபுறம் இந்த பெருந்தொற்று சூழலுக்கு மத்தியில் கடந்த 2020 மார்ச் தொடக்கம் டிசம்பர் வரை உலகின் பெரும் செல்வந்தர்கள் தமது செல்வத்தை 3.9 டிரில்லியன் டொலர்களாக அதிகரித்துக் கொண்டுள்ளனர்.

முதல் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு மாத்திரம் இந்தக் காலப்பகுதியில் 540 பில்லியன் டொலர்களாக அதிகரித்திருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Tue, 01/26/2021 - 13:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை