கண்டி, புதிய இந்திய உதவி உயர்ஸ்தானிகராக ராகேஷ் நட்ராஜ்

கண்டி, புதிய இந்திய உதவி உயர்ஸ்தானிகராக ராகேஷ் நட்ராஜ் நியமிக்கப்பட்டு 07ஆம் திகதி முதல் பதவி பொறுப்பேற்றுள்ளார். கடந்த மூன்று வருடகாலமாக சேவையிலிருந்த திரேந்திரசிங் தமது சேவைக் காலத்தை நிறைவு செய்து சென்றுள்ளார்.

இந்திய வெளியுறவு விவகார சேவையில் 2015ஆம் ஆண்டு இணைந்த ராகேஷ் நட்ராஜ் , புதுடில்லி இந்திய வெளியுறவு விவகார அமைச்சில் நிர்வாகப்பிரிவிலும், வர்த்தக, கலாசார, பொது உறவு மற்றும் பிரசார பிரிவிலும் பொறுப்பாளராக சேவையாற்றியவர்.

1984ஆம் ஆண்டு தமிழ் நாடு மதுரையில் பிறந்த இவர் ஓரு மின்னியல் மற்றும் தொடர்பாடல் துறையில் இளமாணி பட்டமும் லக்னோ முகாமைத்துவ நிறுவனத்தில் வர்த்தகத் துறையில் முதுமாணி பட்டமும் பெற்றவர். ஊடகத்துறையில் முத்திரை பதித்த ஊடகவியலாளரான இவர், இந்து பத்திரிகையின் சென்னை பதிப்பிலும் இந்தியன் எக்ஸ்பிரஸ் டில்லி பதிப்பிலும் பணிப்புரிந்தவர். ஊடகவியலாளராக ஆறு வருடம் பணிபுரிந்த இவர் அனுபவமுள்ள ஊடகவியலாளராவார். ஊடகவியலாளராக இருந்தே 2015ஆம் அண்டு வெளியுறவு விவகார சேவையில் இணைந்துள்ளார். இவர் இலக்கியத் துறையிலும், வரலாற்றுத் துறையிலும், பொருளியல் துறையிலும், விளையாட்டுத்துறையிலும், இசைத்துறையிலும் ஆர்வமிக்கவர். இவர் ஆங்கிலம், தமிழ், ஸ்பானிய மொழிகளில் உரையாற்றக்கூடியவர்.

கண்டி தினகரன் சுழற்சி நிருபர்

Wed, 01/13/2021 - 12:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை