இந்தியாவில் கொரோனா மருந்து வழங்கும் திட்டம்; வைரஸின் முடிவின் ஆரம்பம்

மோடியுடன் பிரதமர் மஹிந்த பரஸ்பர கருத்துப்பரிமாறல்

கொரோனா வைரஸின் முடிவின் ஆரம்பம் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ட்விற்றரில் பதிவிட்டுள்ளார்.

இந்தியா கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை வழங்கும் பாரிய நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளமை குறித்து இந்திய

பிரதமருக்கு இலங்கை பிரதமர்  மஹிந்த ராஜபக்‌ஷ ட்விற்றரில் பாராட்டு தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்தோடு இந்திய பிரதமருக்கும் மக்களுக்கும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இந்திய விஞ்ஞானிகளினதும் முன்னிலை பணியாளர்களினதும் அயராத முயற்சிகள் கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளதாக இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரதமரின் பாராட்டு செய்திக்கு நன்றி தெரிவித்து ருவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை வேகமாக தயாரித்து, மருந்தினை வழங்கும் நடவடிக்கைகளை ஆரம்பிப்பது ஆரோக்கியமான நோய் இல்லாத உலகத்திற்கான தங்கள் கூட்டு முயற்சி மிக முக்கியமானது எனவும் மோடி பதிவிட்டுள்ளார்.

Mon, 01/18/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை