ஈரான் தடுத்துவைத்துள்ள கப்பலை விடுவிக்க தென் கொரியா முயற்சி

ஈரான் கைப்பற்றி இருக்கும் தனது கப்பலை விடுவிக்கும் முயற்சியில் தென் கொரியா ஈடுபட்டுள்ளது.

எம்.டீ ஹன்குக் கெமி என்ற அந்த இரசாயனக் கப்பல் ஹார்முஸ் நீரிணைக்கு அருகில் வைத்து ஈரானிய படையினரால் கைப்பற்றப்பட்டிருப்பதோடு அதில் இருந்த 20 பணியாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கப்பல் சுற்றுச்சூழல் விதிகளை மீறி இருப்பதாக ஈரான் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் தடை காரணமாக தென் கொரிய வங்கிகளில் இருக்கும் ஈரானிய நிதிகள் முடக்கப்பட்டது தொடர்பில் பதற்றம் நிலவும் நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த எதிர்வரும் நாட்களில் தென் கொரியாவின் மூத்த அதிகாரி ஒருவர் ஈரானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

எனினும் துணை வெளியுறவு அமைச்சர் சொய் ஜொங் குன்னின் இந்தப் பயணம் இடம்பெறுமா என்பது இன்னும் உறுதி இன்றி இருப்பதாக அந்நாட்டு அதிகாரி ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

மறுபுறம் இந்தக் கப்பல் மற்றும் அதன் ஊழியர்களை விடுவிப்பதற்கு தென் கொரியா இராஜதந்திர முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் கங் கியுங் வா தெரிவித்துள்ளார். இதில் இந்தோனேசியா, மியன்மார், தென் கொரிய மற்றும் வியட்நாம் மாலுமிகள் உள்ளனர்.

Wed, 01/06/2021 - 12:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை