கொரோனா ஒழிப்புக்கு ஒக்ஸ்பர்ட் எஸ்ட்ரா ஷெனிகா தடுப்பூசி பெற வாய்ப்பு

- மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர

கொரோனா வைரஸ் ஒழிப்பு தொடர்பில் பெரும்பாலும் எக்ஸ்பர்ட் எஸ்ட்ராஷெனிகா தடுப்பூசி மருந்தைபெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் சுத்தம் சமரவீர தெரிவித்துள்ளார். 

குறித்த தடுப்பூசி மருந்தை இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்வதற்காக நிறுவனங்களுடன் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

தற்போது தயாரிக்கப்பட்டு வரும் மேற்படி ஊசிமருந்தினூடாக புதிய வகை உருமாற்ற வைரசையும் ஒழிக்க முடியும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸை விட புதிய வைரஸ் 70வீத வேகத்தில் பரவும் என்றும் நோய் பாதிப்பு மற்றும் மரணங்களில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

தற்போது பல்வேறு நாடுகளிலும் தயாரிக்கப்பட்டு வரும் தடுப்பூசிகள் மூலம் மேற்படி வைரஸை ஒழிக்க முடியும் என இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(ஸ) 

லோரன்ஸ் செல்வநாயகம் 

 

Fri, 01/15/2021 - 09:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை