கொரோனா நோய் பாதிப்பின் அறிகுறிகள் பற்றி புதிய ஆய்வு

கை, கால், நாக்கில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் கொவிட்–19 வைரஸ் தொற்றுக்கான ஆரம்பக்கட்ட அறிகுறியாக இருக்கலாம் எனப் புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஸ்பெயினின் மெட்ரிட் நகரின் ஐபெமா மருத்துவமனையில் உள்ள வைரஸ் தொற்று நோயாளிகள் 666 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளில் அது கண்டுபிடிக்கப்பட்டது.

4இல் ஒருவருக்கு நாக்கில் மாற்றங்கள் ஏற்பட்டதாகவும், 10இல் 4 பேர், உள்ளங்கை, உள்ளங்காலில் வழக்கத்திற்கு மாறான மாற்றங்கள் ஏற்பட்டதாகவும் கூறினர்.

சில நோயாளிகள் நாக்கு வீங்கியதாகவும் திட்டுகள் தோன்றியதாகவும் குறிப்பிட்டனர். அந்தத் திட்டுகள் நாக்கில் சுவை இழப்புக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

உள்ளங்கை, உள்ளங்காலில் எரிச்சல் உண்டாவது, சிவந்துபோவது, சில சமயம் சிறிய பருக்கள் உருவாவது ஆகியவையும் வைரஸ் தொற்றுக்கான அறிகுறி என ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த, லேசான அறிகுறிகள் கொண்ட வைரஸ் தொற்று நோயாளிகளில் கிட்டத்தட்டப் பாதிப் பேர் அத்தகைய அறிகுறிகள் இருந்ததை ஒப்புக்கொண்டதாக ஆய்வு கூறியது.

Fri, 01/29/2021 - 12:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை