அமெரிக்காவில் பெண் மீதான மரணதண்டனை நிறுத்திவைப்பு

அமெரிக்க மத்திய அரசினால் மரண தண்டனைக்கு முகம்கொடுத்திருக்கும் ஒரே பெண்ணின் தண்டனையை 24 மணி நேரத்திற்கு நிறுத்தி வைப்பதற்கு நீதிபதி ஒருவர் உத்தரவிட்டுள்ளார்.

அவர் மீது மரண தண்டனை நிறைவேற்றப்பட அவரது மனநலம் தகுதியுடன் உள்ளதா என்பதை சொதிப்பதற்கே நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

லிசா மொன்ட்கோமரி என்ற அந்தப் பெண் 2004 ஆம் ஆண்டு கர்ப்பமுற்ற பெண்ணை கழுத்தை நெரித்துக் கொன்று அவரது வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்த குற்றத்திற்காக நேற்று விச ஊசி செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்தது.

இன்டியானாவில் இருக்கும் மத்திய சிறையிலேயே இந்தத் தண்டனை நிறைவேற்றப்படவிருந்தது.

52 வயதான மொன்ட்கோமரிக்கு தம் மீது மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை புரிந்துகொள்ளும் உள திறன் இல்லை என்ற ஆதாரத்தின் அடிப்படையில் நீதிமதி ஜேம்ஸ் பெட்ரிக் ஹென்லோன் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த 70 ஆண்டுகளில் மத்திய அரசின் மரண தண்டனைக்கு முகம் கொடுக்கும் முதல் பெண்ணாக அவர் உள்ளார்.

Wed, 01/13/2021 - 13:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை