ஏழை நாடுகளுக்கு இந்த மாத இறுதியில் தடுப்பூசி வழங்கல்

உலக சுகாதார அமைப்பு இந்த மாத இறுதியிலிருந்து ஏழை நாடுகளுக்கு கொவிட்–19 தடுப்பூசிகளை வழங்குவதற்கு இருப்பதாகக் கூறியுள்ளது.

இந்தத் தடுப்பூசித் திட்டத் தலைவர் கேட் ஓபிரையன் அதனைத் தெரிவித்தார்.

“2021 ஆம் ஆண்டு முடிவுக்குள் இந்த நாடுகளுக்கு போதுமான தடுப்பு மருந்துகளை வழங்குவதற்கு எமக்கு சுமார் 7 பில்லியன் டொலர் தேவைப்படுகிறது. இந்த 7 பில்லியன் டொலரில் 6 பில்லியன் டொலர் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது” என்று சமூக ஊடக நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற ஓபிரையன் தெரிவித்தார்.

இந்த ‘கொவெக்ஸ்’ திட்டத்திற்காக உலக சுகாதார அமைப்பு 2 மில்லியன் தடுப்பூசிகளை வாங்கியுள்ளது. உலகெங்கும் நியாயமான முறையில் தடுப்பூசியை விநியோகிக்க இந்தத் திட்டம் வகைசெய்யும்.

இந்த ஆண்டு இறுதிக்குள் கொவெக்ஸ் திட்டத்தில் பங்கேற்கும் நாடுகளில் 20 வீதமான மக்களுக்குத் தேவையான தடுப்பூசிகளை விநியோகிக்க உலக சுகாதார அமைப்பு இலக்கு கொண்டுள்ளது.

இதற்கிடையே, பிரிட்டனில் அடையாளம் காணப்பட்ட புதிய வகைக் கொரோனா வைரஸ் தொற்று, 22 ஐரோப்பிய நாடுகளில் பரவியிருப்பது குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

Sat, 01/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை