இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு

உலகில் மிகவும் ஆபத்தான எரிமலைகளில் ஒன்றான இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடித்து சிதற ஆரம்பித்துள்ளது.

மத்திய ஜாவா மாகாணத்தில் 9 ஆயிரத்து 721 அடி உயரம் உள்ள மெராபி எரிமலை வெடித்துச் சாம்பலை உமிழ்ந்து வரும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, எரிமலை வெடிப்பு காரணமாக அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடும் வெப்பம் நிலவி வரும் சூழலில், அப்பகுதி அருகே வீதிகளில் செல்லும் மக்கள் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எரிமலைக் குழம்பு வீதிகளை அடையக்கூடும் என்று இந்தோனேசிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். பசிபிக் நெருப்பு வலய பகுதியில் அமைந்திருக்கும் நாடாக இந்தோனேசியா உள்ளது. இதனால் இங்கு அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு நிகழ்கின்றன.

அந்நாட்டில் சுமார் 128 இயங்கு நிலையில் எரிமலைகள் காணப்படுவதோடு அவைகளில் அதிக இயக்கம் கொண்ட எரிமலையாக மெராபி உள்ளது. கடைசியாக இந்த எரிமலையில் 2010 ஆம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர வெடிப்பில் 340 பேர் கொல்லப்பட்டதோடு 60,000க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்தனர்.

Fri, 01/29/2021 - 10:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை