Header Ads

ட்ரம்பின் பயணத் தடையை தொடர ஜோ பைடன் முடிவு

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக இன்று பதவியேற்கவுள்ள ஜோ பைடன் நோய்ப்பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பயணத் தடைகளை மீட்டுக்கொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரேசில், ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்ட பயணத் தடைகளை ரத்து செய்யப்போவதாக அண்மையில் கூறியிருந்தார். ஆனால் பயணத் தடை தொடர்ந்து நடப்பில் இருக்கும் என்று பைடனின் பேச்சாளர் ஜென் சாக்கி தெரிவித்துள்ளார். மருத்துவக் குழுவின் ஆலோசனைப் படி பைடன் தரப்பு நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.

தற்போது உலக அளவில் நோய்ப்பரவல் மோசமடைந்து வருகிறது, புதுவகையான கொரோனா வைரஸ்களும் அடையாளம் காணப்பட்டு வருவதால் பயணத் தடைகளை ரத்து செய்வது சிறந்தது அல்ல என்றும் சாக்கி குறிப்பிட்டார்.

தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 24 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு கொவிட்–19 நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. 400,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

Wed, 01/20/2021 - 14:04


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.