தொடரும் சீரற்ற காலநிலை வாகன சாரதிகளே அவதானம்

மலையகத்தில் சீரற்ற காலநிலை நிலவுவதால்  பனி மூட்டம் அதிகமாக காணப்படுகின்றது. இதனால் மலையக வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் தங்களது வாகனங்களை மிகவும் அவதானமாக செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஹற்றன் கொழும்பு பிரதான வீதியில் கலுகல, பிட்டவல, கினிகத்தேனை, தியகல, வட்டவளை, ஹற்றன், ஆகிய பகுதியிலும்,ஹற்றன் நுவரெலியா வீதியில் குடகம, கொட்டகலை, தலவாக்கலை, சென்கியார்,ரதல்ல,நானுஓயா ஆகிய பிரதேசங்களிலும் கடுமையான பனி மூட்டம் காணப்படுவதனால் இந்த வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் தங்களது வாகனத்தின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்தவாறு தமக்குரிய பக்கத்தில் மிகவும் அவதானமாக செலுத்துவதன் மூலம் வாகன விபத்துக்களை தவிர்த்து கொள்ளலாம் என போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதே வேளை நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை வேளையிலும் காலையிலும் பெய்து வரும் மழைக்காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன. எனவே மலைகளுக்கும் மண் மேடுகளுக்கும் அருகாமையில் வசிப்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதே வேளை ஹற்றன் கொழும்பு, ஹற்றன் நுவரெலியா, ஹற்றன் மஸ்கெலியா உள்ளிட்ட பல வீதிகளில் மண் திட்டுக்கள் சரிந்து வீழ்ந்துள்ளன எனவே இவ்வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதான பயணிக்க வேண்டும் என போக்குவரத்து பொலிஸார்  அறிவுறுத்தியுள்ளனர்.

ஹற்றன்  விசேட நிருபர் , நோட்டன் பிரிஜ் நிருபர்

Wed, 01/20/2021 - 09:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை