இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இன்று வருகிறார்

ஜனாதிபதி, பிரதமர், வெளிநாட்டமைச்சரை சந்திப்பார்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இன்று இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வருகிறார்.

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பிற்கிணங்க இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கையில் 07ஆம் திகதி வரை தங்கியிருப்பாரென வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. இந்திய வெளிவிவகார அமைச்சராக முதல் தடவையாக இலங்கைக்கு விஜயம் செய்யும் அவர் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரையும் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.

புதிய ஆண்டில் வெளி நாட்டு உயர்மட்ட இராஜதந்திரி ஒருவர் இலங்கைக்கு வரும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் வெளிநாடு ஒன்றுக்கு இந்த ஆண்டில் மேற்கொள்ளும் முதலாவது விஜயமாக அது அமைகின்றது என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 01/05/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை