பெருந்தோட்டத் தொழிலாளருக்கு பாதுகாப்பான வாழ்விட ஏற்பாடு

ரூ.1.3 மில்லியன் செலவில் நிர்மாணம்; பணிகள் பூர்த்தியாகும் வரை வதிவிடம்

பெருந்தோட்டத் தொழிலாளர் சமூகத்தை இலக்காகக் கொண்டு மிகவும் பாதுகாப்பான வாழ்விடத்தை உரித்தாக்குவதற்காக தோட்ட வீடமைப்பு முறைமையை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

திருத்தம் செய்யப்படுவதன்படி தற்போதுள்ள லயன் அறைகளை அகற்றி அதே இடத்திலேயே புதிய வீடுகளை அமைத்தல்,

வெள்ளம், மண்சரிவு போன்ற அனர்த்தங்களால் ஆபத்துக்கள் இருப்பின் மற்றும் லயன் அறைகள் அமைந்திருக்கும் இடங்களில் இடவசதிகள் போதுமானளவு இல்லாவிட்டால் வேறு இடங்களில் வீடுகளை நிர்மாணித்தல், பிற்காலத்தில் இந்த வீடுகளை இரண்டு மாடிகளைக் கொண்ட வீடுகளாக நிர்மாணிக்கக் கூடிய வகையில் 550 சதுர அடிகளைக் கொண்ட வீட்டின் முதலாம் கட்டத்திற்காக 1.3 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணித்தல்,

கால்நடை வளர்ப்பு மற்றும் வீட்டுத் தோட்டத்திற்காக மேலதிகமாக 03 பேர்ச்சர்ஸ் காணியை ஒவ்வொரு வீட்டு உரிமையாளருக்கும் வழங்கல்,

வீடமைப்புக்கான பெறுமதியின் 50 வீதத்தை பயனாளிகளிடமிருந்து மீள அறவிடுவதற்கும், அதற்காக 20 வருடகாலம் வழங்குதல்,

லயன் வீடுகள் அமைந்துள்ள இடத்தில் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் வரையில் வேறு இடத்தில் தற்காலிகமாக வசிப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்குதல் போன்றவை உள்ளிட்ட  விடயங்கள் உள்ளிட்டதாகதோட்ட வீடமைப்பு முறைமையில்திருத்தம் செய்யப்படுகின்றன.

தோட்ட தொழிலாளர்களுக்கு லயன் அறைகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தோட்ட வீடமைப்பு முறைமை 2,000 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை பல்வேறு பொறிமுறையின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது அரசாங்கத்தின் அனுசரணையுடன் 07 பேர்ச்சர்ஸ் காணி உறுதியுடன் கூடிய 550 சதுர அடிகளைக் கொண்ட வீடமைப்பு மற்றும் இந்திய அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புக்களுடன் 550 சதுர அடிகளைக் கொண்ட 02 வீட்டுத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இம்முன்மொழிவுத் திட்ட முறைமையின் கீழ் வீடுகளை வழங்கும் போது பின்பற்றுகின்ற நடைமுறைகள் மாறுபடுகின்றமையால் ஏற்றத்தாழ்வுகள் தோன்றியுள்ளதால், தோட்ட மக்களுக்கு வீடுகளை வழங்கும் போது பொதுவான ஒரு பொறிமுறையைப் பின்பற்றுவதற்கும், அதற்கமைய தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காகவும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கே.அசோக்குமார்

Wed, 01/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை