ஸ்பெயினில் பனியை அகற்கும் பணி தீவிரம்
ஸ்பெயினில் பல ஆண்டுகளில் காணாத மிக மோசமான பனிப்புயல் வீசியதை அடுத்து வீதிகளில் குவிந்துள்ள பனியை அகற்றும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
பனிப்பொழிவால் வாகனத்திற்குள் சிக்கிக்கொண்ட 2,500 ஓட்டுநர்களை அவசரச் சேவை ஊழியர்களும் இராணுவத்தினரும் மீட்டுள்ளனர்.
பிலோமினா என்று பெயரிடப்பட்டுள்ள பனிப்புயலில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், ஸ்பெயினின் பல பகுதிகளில் தட்பவெப்பநிலை பூஜ்யத்திற்குக் கீழ் 10 டிகிரி செல்சியஸ் குறையலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. அது வரும் வியாழக்கிழமை வரை நீடிக்கலாம்.அதனால், பனி ஐஸ்கட்டியாக மாறும் அபாயம் உள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். எனினும், கொரோனா தொற்றுக்கு எதிராகத் தடுப்பு மருந்து செலுத்தும் திட்டம் தொடரும் என்று அவர் வலியுறுத்தினார்.
from tkn
Post a Comment