பலஸ்தீனத்திற்கான அமெரிக்க நிதியுதவிகள் மீண்டும் ஆரம்பம்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் நிறுத்தப்பட்ட பலஸ்தீனர்களுக்கான உதவிகளை தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் ஆரம்பித்திருப்பதோடு பலஸ்தீனத்திற்கான தூதரகத்தையும் மீண்டும் திறந்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன பிரச்சினைக்கு இரு நாட்டு தீர்வுக்கு பைடன் ஆதரவு அளிப்பதாக ஐ.நாவுக்கான அமெரிக்க பதில் தூதுவர் ரிச்சர்ட் மில்ஸ் தெரிவித்துள்ளார். இதனை முன்னெடுப்பதற்கு உதவியாக அமெரிக்கா நம்பகரமான செயற்பாடுகளை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கு பக்கச்சார்பாக செயற்படுவதாகக் கூறி ட்ரம்ப் நிர்வாகத்துடனான உறவை துண்டித்த பலஸ்தீனர்கள் அவரது அமைதி முயற்சியையும் நிராகரித்தனர்.

ஓர் ஆண்டுக்கு முன்னர் வெளியிடப்பட்ட இந்த அமைதி முயற்சியில் ஆக்கிரமிப்பு மேற்குக் கரை மற்றும் ஜோர்தான் பள்ளத்தாக்கில் யூதக் குடியேற்றங்கள் அங்கீகரிக்கப்பட்டதோடு ஜெரூசலம் இஸ்ரேலின் பிரிக்கப்படாத தலைநகர் என்று கூறப்பட்டது.

ட்ரம்ப் நிர்வாகம் பலஸ்தீனத் தன்னாட்சிக்கான நிதியை நிறுத்திவைத்து, அதனுடனான இராஜதந்திர உறவையும் துண்டித்தது. ஆனால், பைடன் நிர்வாகம் பலஸ்தீனத் தலைவர்களுடன் மீண்டும் பேச்சை ஆரம்பிக்கும் என்று மில்ஸ் கூறினார்.

Fri, 01/29/2021 - 14:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை