கடற்படை பிரதம அதிகாரியாக சுமித் வீரசிங்க

கடற்படை பிரதம அதிகாரியாக சுமித் வீரசிங்க-Rear Admiral Sumith Weerasinghe Appointed as Chief of Staff of the Navy

ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க, இலங்கை கடற்படையின் பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (15) முதல் அமுலாகும் வகையில் இந்நியமனம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.

கடற்படை பிரதம அதிகாரியாக சுமித் வீரசிங்க-Rear Admiral Sumith Weerasinghe Appointed as Chief of Staff of the Navy

குறித்த நியனமத்திற்கான கடிதம் இன்றையதினம் (15) கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் வழங்கி வைக்கப்பட்டது.

ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க 1985ஆம் கடற்படையில் இணைந்த அவர், இறுதியாக, கடற்படையின் பிரதி பிரதம அதிகாரியாகவும், மேற்கு கட்டளை பிரிவின் கட்டளையிடும் அதிகாரியாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Fri, 01/15/2021 - 13:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை