Header Ads

கெஹலியவின் ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

அரச கொள்கைகள் மற்றும் அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் தொடர்பாக சரியான தகவல்களை மக்களுக்கு வழங்கக் கூடிய வகையில் 'தேசிய அபிவிருத்தி ஊடக மையம்' ஒன்று நிறுவப்படவுள்ளது. ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்துள்ள ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

'நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு' என்ற அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் உள்வாங்கப்பட்டுள்ள அரச கொள்கை, அதன் மூலம் அடைவதற்கு எதிர்பார்க்கப்படும் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் அவற்றின் உண்மையான முன்னேற்றங்கள் மக்களுக்கு சரியான வகையில் தொடர்பாடல் மேற்கொள்ளப்படாதமை தெரியவந்துள்ளது.

அதனால், அரச கொள்கைகள் மற்றும் அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் தொடர்பாக சரியான தகவல்களை மக்களுக்கு வழங்கக் கூடிய வகையில் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் 'தேசிய அபிவிருத்தி ஊடக மையம்' எனும் பெயரில் அலகு ஒன்றை நிறுவுவதற்காக வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

 

Wed, 01/06/2021 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.