‘பயங்கரவாதிகளை நினைவு கூருவதை அனுமதிக்கக் கூடாது

-அமைச்சர் சரத் வீரசேகர

யாழ்.பல்கலைக்கழகம் தனியொரு சமூகத்தின் சொத்தல்ல என்று கூறியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, அப்பாவிப் பொதுமக்களை நினைவுகூரும் போர்வையில் தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகளை நினைவு கூருவதற்கு அனுமதியளிக்கக்கூடாதென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, தெரிவித்துள்ளார். அத்துடன் யாழ்.பல்கலைக்கழகம் தனியொரு சமூகத்தின் சொத்தல்ல என்றும் அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

‘யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்பது தனியொரு சமூகத்தின் பிரத்தியேக களமோ அல்லது சொத்தோ அல்ல. இது ஒருமித்த இலங்கையின் அனைத்து சட்டங்களுக்கும் உட்பட்டதாகும்’ என்றும் அவர் அந்த பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அப்பாவிப் பொதுமக்களை நினைவுகூருவது என்ற போர்வையில் தடைசெய்யப்பட்ட ஒரு இயக்கத்தை நினைவுகூருவதற்கும் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்கும் எந்தவொரு தரப்பினருக்கும் அனுமதியளிக்கக்கூடாதென்றும் சரத் வீரசேகர வலியுறுத்தியிருக்கிறார்.

 

Tue, 01/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை