அவுஸ்திரேலிய தேசிய தினத்தில் ஆர்ப்பாட்டம்

கலாசார ரீதியில் உணர்வுபூர்வமான அவுஸ்திரேலிய தினத்தில் கொரோனா தொற்றுக்கு எதிரான காட்டுப்பாடுகளை மீறி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிட்னி நகரில் சுமார் 2,000 பேர் வரை பங்கேற்ற இந்தப் பேரணியில் குறைந்தது ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக் காரணமாக 500 பேர் வரை ஒன்றுகூடவே அனுமதி உள்ளது.

அவுஸ்திரேலியாவில் காலனித்துவம் ஆரம்பிக்கப்பட்ட தினத்தையே அந்நாட்டின் தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1788 ஆம் ஆண்டு சிட்னிக்கு பிரிட்டனின் முதல் கடற்படை தரையிறங்கிய தினமே ஜனவரி 26 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.

எனினும் இதனை “ஆக்கிரமிப்பு தினம்” என்று கூறி விமர்சிப்பவர்கள் இதற்கு எதிராக ஆண்டுதோறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் நாட்டின் பூர்வக் குடிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.

அவுஸ்திரேலிய தினம் பற்றிய சர்ச்சை நீடித்தபோதும் அன்றைய தினத்தை விடுமுறை தினமாக அந்நாட்டு அரசு தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Wed, 01/27/2021 - 07:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை