ஹர்த்தாலுக்கு முஸ்லிம் சமூகம் பூரண ஆதரவளிக்க வேண்டும்

- ரிஷாட் எம்.பி வேண்டுகோள்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடித்து தரைமட்டமாக்கியதை எதிர்த்தும், சிறுபான்மைச் சமூகங்களுக்கு இந்த அரசினால் இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டித்தும் வடக்கு, கிழக்கில் இன்று அனுஷ்டிக்கப்படும் பூரண கர்த்தாலுக்கு முஸ்லிம் சமூகம் ஆதரவு வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியூதின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் சமூகங்களாக இலங்கைச் சிறுபான்மையினர் ஆக்கப்பட்டுள்ளனர். ஆகக் குறைந்தது உயிரிழந்தோரை நினைவுகூரவும், நல்லடக்கம் செய்யவும் சிறுபான்மைச் சமூகங்களுக்கு மறுக்கப்படுகின்றன.

இவற்றுக்குப் பின்னால் ஆளும் வர்க்கத்தின் அதிகாரக் கெடுபிடிகள் இருப்பதை நாம் அறிவோம். இவ்வாறான செயற்பாடுகளை ஜனநாயக ரீதியில் எதிர்ப்பதற்கு சிறுபான்மையினர் ஒன்றுபட வேண்டும்.

முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள மத ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, தமிழ்த் தலைமைகள் குரல் கொடுத்து வருவதை நாம் மறக்க முடியாது.

மன்னார் குறூப் நிருபர்

Mon, 01/11/2021 - 11:56


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை