கொழும்பு துறைமுக கிழக்கு முனையம்; உண்மைக்கு புறம்பானதை கூறி எதிரணி அரசியல் நடத்துகிறது

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் உண்மைக்குப்புறம்பான கருத்துகளை வெளிப்படுத்தி எதிர்க்கட்சியினர் அரசியல் செய்வதுவருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை எந்தவொரு நாட்டுக்கும் விற்பனை செய்யவோ அல்லது குத்தகைக்கு கொடுக்கவோ மாட்டோமென ஜனாதிபதி தெளிவாக கூறியுள்ளார்.

எமது நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு சொந்தமான அம்பாந்தோட்டை துறைமுகத்தை உலகில் எந்தவொரு நாட்டிலும் இல்லாத வகையில் முழுமையாக கொடுத்திருந்தனர். அவர்கள்தான் தற்போது கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் பற்றி பேசுகின்றனர்.

எதிர்க்கட்சியினர் உயிர்வாழ்வதற்கு ஏதாவதொரு காரணம் தேவையாகும்.

அவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்வதற்கே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் பற்றி உண்மைக்குப்புறம்பான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 01/16/2021 - 09:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை