நாளுக்கு நாள் மோசமடையும் வடக்கின் கொரோனா நிலைமை

மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன்

வடமாகாணத்தில் புதிய கொரோனா தொற்றாளர்கள் ஒவ்வொரு நாளும் அடையாளம் காணப்படுவதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக வைத்தியர் ஆ.கேதீஸ்வரன், கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மன்னாரில் கடந்த சில நாட்களில் அடையாளம் காணப்பட்டவர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்த 04 பேர், (14) அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் (14) நடத்தப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் 09 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் காங்கேசன்துறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீர்ரொருவரென அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவைச் சேர்ந்த 02 பெண்கள் (14) அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் பணியாற்றும் கடையைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்றுள்ளமை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்டது. அதனால் இப் பெண்கள் இருவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மாதிரிகள் பெறப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தியபோது கோரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் வவுனியா- செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்றுள்ளமை (14) கண்டறியப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் 06 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Sat, 01/16/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை