ஜனாதிபதி புட்டினுக்கு எதிராக ரஷ்யாவெங்கும் பாரிய பேரணி

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எதிராக அந்நாட்டில் பல பகுதிகளிலும் கடந்த சனிக்கிழமை பாரிய பேரணிகள் இடம்பெற்றுள்ளன.

கடந்த ஆண்டு நஞ்சூட்டப்பட்ட நிலையில் சிகிச்சைக்கு பின் கடந்த வாரம் நாடு திரும்பிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவல்னிக்கு இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

பல நகரங்களிலும் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் 3,000க்கும் அதிமானவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தலைநர் மொஸ்கோவில் மாத்திரம் 40,000 பேர் வரை இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கலகமடக்கும் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை இழுத்துச் செல்வது மற்றும் தாக்கும் படங்கள் பதிவாகியுள்ளன.

குறிப்பாக உலகின் குளிரான நகரங்களில் ஒன்றான சைபீரியாவின் யகுட்ஸ் நகரிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவர்களை பொலிஸார் இழுத்துச் சென்று வான்களில் ஏற்றும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

44 வயதான நவல்னி மொஸ்கோ சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதோடு நான்கு வழக்குகளுக்கு முகம்கொடுத்துள்ளார். அவர் பல ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு எதிர்கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Mon, 01/25/2021 - 12:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை