கல்முனை கடற்கரை பள்ளி கொடியேற்றம்

சுகாதார வழிமுறைகளுடன் இன்று ஆரம்பம்

கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீபின் 199 ஆவது வருடாந்த கொடியேற்ற விழா இன்று ஆரம்பமாகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நோய் காரணமாக சுகாதாரநடைமுறைகளையுடைய சமூக இடைவெளியைப் பின்பற்றி எதுவிதகலாசாரநிகழ்வுமற்ற முறையில் இன்று கொடியேற்றம் நடைபெறுமென கல்முனை முகைதீன் ஜும்ஆப் பள்ளித் தலைவர் வைத்தியர் யூ.எல்.ஏ.அஸீஸ் தெரிவித்தார். கல்முனை கிழக்கே உள்ள கடலோரம் இப்பள்ளிவாசல் அமைந்துள்ளதால் இதனை எல்லோரும் கடற்கரை பள்ளிவாசல் என்று அழைக்கின்றனர். இப்பள்ளிவாசலுக்கு வரலாற்று ரீதியாக சிறப்புச் சேர்ப்பது வருடாந்த கொடியேற்ற விழாவாகும்.

வருடா வருடம் ஜமாதுல்ஆகிர் முதல் பிறையுடன் ஆரம்பமாகும் இக்கொடியேற்ற விழா சங்கைமிகு சாகுல் ஹமீது ஒலியுல்லாவின் வருடாந்த நினைவை முன்னிட்டு நடத்தப்படுகிறது.

இக் கொடியேற்றம் காலப்பகுதியில் தர்காவில் தொடர்ந்து 12 நாட்கள் மார்க்கச் சொற்பொழிவுகள், மௌலீத் மஜ்லிஸ், பக்கீர் ஜமாஅத்தினரின் றாதிபு என்பன சிறப்பாக நடைபெறும்.இவ்வாறே 14ஆம் திகதி கொடியேற்றப்பட்டு 25ஆம் திகதி அன்று மாபெரும் கந்தூரி அன்னதானத்துடன் இவ் விழா இனிதே நிறைவுறும்.

 

கல்முனை விஷேட நிருபர்

Thu, 01/14/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை