ஐக்கிய அரபு இராச்சியத்தில் இஸ்ரேலின் தூதரகம் திறப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய தூதரகம் திறக்கப்படதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த இரு தரப்புக்கும் இடையே இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு நான்கு மாதங்களின் பின்னரே இந்த நகர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

“தூதரகத் தலைவர் எய்டன் நேய்வின் வருகையுடன் அபூதாபியில் இஸ்ரேலிய தூதரகம் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்தும் ஒப்பந்தத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்துடன் பஹ்ரைனும் கடந்த செப்டெம்பர் மாதம் கைச்சாத்திட்டன.

இதனை முதுகில் குத்தும் செயல் என்று பலஸ்தீனர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

நேரடி விமானப் போக்குவரத்து மற்றும் விசா இன்றி பயணிப்பது தொடர்பில் இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இடையே ஏற்கனவே புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்தாகி உள்ளது.

மறுபுறம் இஸ்ரேலில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதரகத்தை அமைப்பதற்கு அந்நாட்டு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tue, 01/26/2021 - 15:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை