இ.ஒ.கூட்டுத்தாபன தமிழ்ச் சேவை சிறீஸ்கந்தராஜா காலமானார்

- வி.என். மதிஅழகன் இரங்கல்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச் சேவை முன்னாள் ஒலிபரப்பு ஒழுங்கு கட்டுப்பாட்டாளர் அன்னலிங்கம் சிறீஸ்கந்தராஜா தனது 83ஆவது வயதில் கனடாவில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடா - ஒன்ராறியோ மாகாணம்- கோர்ன் வோல் (CORN WALL) நகரிலுள்ள மருத்துவமனையில் 20ஆம் திகதி மாலை 4,00மணிக்கு அவரது மரணம் சம்பவித்துள்ளது.

காலஞ்சென்ற சிறீஸ்கந்தராஜா 1959ஆம் ஆண்டு இலங்கை வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பு உதவியாளராக இணைந்தார்.இசைத்தட்டு களஞ்சியத்தில் தொகுப்பாளராகப் பணியாற்றிய பின்னர் கிராமிய நிகழ்ச்சித் தயாரிப்பாளர் -அமைப்பாளர் பதவிகளினூடாக அவர் ஆற்றிய சேவை குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்ச்சேவை வரலாற்றில் கிராமிய கலை வடிவங்கள்  கலையகத்துக்கு வெளியே நாடெங்கிலுமாக ஒலிப்பதிவுகள்  இடம்பெற வழிவகுத்தார் என்ற பெருமை இவரையே சாரும்.1991இல் ஒலிபரப்பு வாழ்க்கையிலிருந்து ஒய்வு பெற்ற சிறீஸ்கந்தராஜா, கனடாவுக்கு புலம் பெயர்ந்தார்.

புதல்விகள் நால்வரையும் புதல்வர் ஒருவரையும் பிரிந்து சென்றுள்ள சிறீயின் இறுதிக் கிரியைகள் ரொறன்ரோ (TORONTO) மாநகரில் இம்மாத இறுதி வாரக் கடைசியில் நடைபெறும். காலஞ்சென்ற சிறீஸ்கந்தராஜா தயாரித்து வழங்கிய கிராமிய நிகழ்ச்சிகள் நேயர்கள் மத்தியில் மிகுந்த பிரபலம் பெற்று விளங்கின என்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முன்னாள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வி.என்.மதிஅழகன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Fri, 01/22/2021 - 14:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை