Header Ads

தனிமனித சுதந்திரம் பாதிப்பு எனகூறி ஆளுநருக்கு கடிதம்

புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மாணிக்கபுரம் கிராம அபிவிருத்தி சங்க தலைவரை சமூக சேவைகள் செய்ய வேண்டாம் என பிரதேச செயலாளரால் அறிவிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் தனிமனித சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

மீள்குடியேற்றத்தின் பின்னர் மாணிக்கபுரம் கிராமத்தில் மக்களுக்கு சேவை செய்யும் நோக்குடன் செயற்பட்டு கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவராக கடமையாற்றி வரும் வேளையில் கடந்த 27.10.2020 அன்று தொடக்கம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரால் தனது சமூக சேவை பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கிராம அபிவிருத்தி சங்க தலைவராக இருக்கமுடியாது என்றும்,சமூக சேவையில் ஈடுபடவேண்டாம் என்றும், வந்தான் வரத்தான் என்றும் அரசியலில் ஈடுபடவேண்டாம் என்றும் கவனமாக வீட்டில் இருக்குமாறும் பிரதேச செயலாளரால் அறிவுறுத்தப்பட்டுள்ளமை தொடர்பிலும், வடமாகாண ஆளுநரிடம் எழுத்துமூலம் 14.12.20 அன்று கடிதம் எழுதியும் இதுவரை பதில் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பு விசேட நிருபர்

Sun, 01/10/2021 - 09:02


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.