ஏகல விபத்தில் காரொன்றில் பயணித்த மூவரும் பலி
ஜா-எல, ஏகல பகுதியில் இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக, ஜா-எல பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று (31) கொழும்பு - மினுவாங்கொடை வீதியில் ஜா-எல, ஏகல பகுதியில் உள்ள கொட்டுகொட பிரதேசத்தில், கொட்டுகொட விமானப்படைத் தளம் அருகே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த வீதியில் வேகமாக பயணித்த கார் ஒன்று வீதியிலிருந்து விலகி, அருகிலுள்ள பஸ் தரிப்பிடத்தில் மோதி புரண்டு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் அதில் பயணித்த மூவரும் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில், கொட்டுகொட, ரத்தொலுகமவைச் சேர்ந்த கிரிஷான் திலகரத்ன (49), ரத்தொலுகமவைச் சேர்ந்த டிரோன் ஏர்ல் (63), புல்லுஹேன, பமுணுகமவைச் சேர்ந்த கே.டி. கிரிஷான் மஹிந்த (48) ஆகியோரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பின்னர் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
குறித்த மூன்று பேரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக ராகமை மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, ஜா-எல பொலிஸார விபத்து குறித்தான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
from tkn
Post a Comment