ஸ்மார்ட் முகக்கவசம் அறிமுகம்

ஒலிவாங்கியுடன் முழுமையான ஸ்மார்ட் முகக்கவசத்தை கணினி விளையாட்டு நிறுவனமான ரேசர் தயாரித்துள்ளது.

மேம்படுத்தப்பட்ட இந்த முகக்கவசத்தில் பயனர்களின் பேச்சில் ஏற்படும் தெளிவின்மையை தவிர்க்கும் வகையில் குரல் ஒலியை உயர்த்தி வழங்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

காற்றோட்டத்துடன் உஷ்னமான காற்றை குளிர்விக்கும் வசதியும் இந்த முகக்கவசத்தில் உள்ளது. இந்த முகக்கவசம் என்95 ரக மருத்துவ முகக்கவசமாக வகைப்படுத்தப்பட்டிருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தெரியக்கூடிய பிளாஸ்டிக்கினால் இந்த முகக்கவசம் உருவாக்கப்பட்டிருப்பதால் உதடசைவுகள் மற்றும் முக பாவனைகளை தெளிவாக பார்க்கக் கூடியதாக உள்ளது.

முகக்கவசத்திற்குள் சிறிய விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பதால் இருளான நேரத்தில் தானாக எரியக்கூடிய வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.

எனினும் இது ஒரு திட்ட அடிப்படையிலான தயாரிப்பு என்றும் தற்போது விற்பனைக்கு விடப்படவில்லை என்றும் ரேசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Thu, 01/14/2021 - 21:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை