முள்ளியவளை பாடசாலை மைதானத்தில் பெருமளவு ஆட்லறி மோட்டார் குண்டுகள்

துப்புரவு பணியில் தென்பட்டதால் படையினரின் உதவியுடன் மீட்பு

முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் படையினரால் 146 மோட்டார் குண்டுகளும் அதன் பாகங்களும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

கடந்த 25 ஆம் திகதி மைதான துப்புரவு பணியின் போது வெடிபொருட்கள் இருப்பது அடையாளம் காணப்பட்டது. அந்த பகுதியில் மேலும் வெடிபொருட்கள் இருக்கலாமென முள்ளியவளை பொலிஸார், அதனை தோண்டி எடுக்க படையினருக்கு அனுமதிக்க வேண்டுமென நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று கடந்த (28) கனரக இயந்திரம் கொண்டு தோண்டப்பட்டது. இந்நிலையில் இப் பகுதியிலிருந்து 152 மில்லிமீற்றர் எறிகணைகள் 110, அதற்குரிய ஸ்கோப் 49,122 மில்லீமீற்றர் எறிகணைகள் 36,அதற்குரிய ஸ்கோப் 29,மற்றும் பியூஸ் 09, எறிகணைகள் வைக்கும் பிளாஸ்டிக் இரும்பு பெட்டிகள் என்பன படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன் அவை படையினரின் பொறியியல் பிரிவினர் கொண்டு சென்றுள்ளார்கள்.

இது தொடர்பிலான அறிக்கையை முள்ளியவளை பொலிசார் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு விசேட நிருபர்

Sat, 01/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை