எரிவாயு அடுப்பு விரைவில் சந்தைக்கு அறிமுகம்

'மேட் இன் ஸ்ரீலங்கா' என்ற பெயரில் புதிய சமையல் எரிவாயு அடுப்பு விரைவில் உள்ளூர் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அத்துருகிரிய, ஒறுவலையிலுள்ள ‘ஒக்டான்’ தனியார் நிறுவனம் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் நேற்றையதினம் அந்த நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் அமைச்சர் விமல் வீரவன்சவுக்குமிடையில் விசேட பேச்சுவார்த்தை ஒன்றும் அமைச்சில் நடைபெற்றது.

நேற்றைய தினம் ‘ஒக்டான்’ தனியார் நிறுவனத்தின் தலைவர் லக்ஷ்மன் விதானாச்சி மற்றும் அதன் உற்பத்தி முகாமையாளர் திலக் குணரத்ன ஆகியோர் மேற்படி ‘மேட் இன் ஸ்ரீலங்கா’ சமையல் எரிவாயு அடுப்பின் மாதிரியுடன் அமைச்சரை சந்தித்தனர்.

அதனையடுத்து கருத்து தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ச மேற்படி சமையல் எரிவாயு அடுப்பு உற்பத்தியை மேலும் விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அதனை உள்ளூர் சந்தையில் அறிமுகப்படுத்தவும் அதற்காக தேசிய தொழில் முயற்சிகள் அதிகார சபையின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளவும் தாம் தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அது தொடர்பில் தனியார் நிறுவனத்தின் தலைவர் தெரிவிக்கையில்;

கைத்தொழில் துறையினருக்கு தொடர்ந்தும் கைகொடுக்கும் அமைச்சராக விமல் வீரவன்சவை குறிப்பிட முடியுமென்றும் அதனால்தான் தமது உற்பத்தியின் மாதிரியை அவருக்கு முதலில் கையளித்துள்ளதாகவும் அதனை சந்தைக்கு அறிமுகப்படுத்த அவர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளமயானது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம் 

Thu, 01/21/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை