தென்கொரியாவில் பிறப்பை விட இறப்பு வீதம் அதிகரிப்பு

தென் கொரியாவில் முதல் முறையாக 2020 ஆம் ஆண்டில் பிறப்பு வீதத்தை விடவும் இறப்பு வீதம் அதிகரித்துள்ளது.

ஏற்கனவே உலகில் மிகக் குறைவான பிறப்பு வீதத்தைக் கொண்ட நாடாக இருக்கும் தென் கொரியா இது பற்றி அதிக அவதானத்தை செலுத்தி உள்ளது.

கடந்த ஆண்டில் அங்கு 275,800 குழந்தைகள் மாத்திரமே பிறந்திருப்பதோடு, 2019 உடன் ஒப்பிடுகையில் அது 10 வீதம் சரிவு கண்டுள்ளது. எனினும் கடந்த ஆண்டில் சுமார் 307,764 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை கொள்கைகளில் அடிப்படை மாற்றங்களை கொண்டுவர அழைப்பு விடுப்பதாக உள்ளது என்று உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மக்கள் தொகை குறைவடைவது நாட்டில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியதாக பார்க்கப்படுகிறது.

இதனால் சுகாதார அமைப்பு மற்றும் ஓய்வூதியம் போன்று பொதுச் செலவுகள் அதிகரிக்கும் என்பதோடு இளைஞர் தொகை குறைவதால் ஆளணித் தட்டுப்பாடு ஏற்பட்டு அது நாட்டின் பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்க வாய்ப்பு உள்ளது.

பிறப்பு வீதம் குறைவடைவதை கையாள்வது தொடர்பில் குடும்பங்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது உட்பட பல்வேறு திட்டங்களையும் ஜனாதிபதி மூன் ஜீ இன் கடந்த மாதம் ஆரம்பித்து வைத்தார்.

Tue, 01/05/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை