பாதசாரிகள் கடவையில் பாடசாலை மாணவியை மோதிச் சென்ற ஆட்டோ

CCTVயில் காட்சி பதிவு; சாரதி பொலிஸாரால் கைது

அதிக வேகமாக சென்ற முச்சக்கர வண்டியில் மோதுண்டு 16 வயது சிறுமியொருவர் விபத்துக்குள்ளாகும் காட்சி சி.சி.டி.வி. கமராவில் பதிவாகியுள்ளது.

ஹற்றன்-, நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் முன்னாலுள்ள பாதசாரிகள் கடவையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

ஹற்றன் ஸ்டொனிக்ளிப் தோட்ட தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 10இல் கல்வி கற்கும் 16 வயது மாணவியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்தில் படுகாயங்களுக்குள்ளான மாணவி, டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு விபத்தை ஏற்படுத்திய சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை திம்புல காவல் துறையினர் மேற்கொண்டு வருவதோடு சாரதி நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

 

Sat, 01/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை