பிரிட்டனில் கொரோனா பரவல் வேகம் அதிகரிப்பு

பிரிட்டனில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 57,700 கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. வைரஸ் தொற்றினால் அங்கு சுமார் 75,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் விரைவிலேயே இத்தாலியைப் பின்னுக்குத்தள்ளி ஐரோப்பாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடு என்ற நிலையை பிரிட்டன் எட்டக்கூடும்.

கடந்த 5 நாட்களாக அங்கு தினசரி 50,000க்கும் அதிகமான நோய்த்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

அடுத்த சில வாரங்களில் வைரஸ் தொற்றால் மரணமடைவோர் எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மரபணு மாற்றம் பெற்ற புதியவ கைக் கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்ட பின்னர் பிரிட்டனில் நிலைமை மோசமடைந்துள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கையைச் சமாளிக்க இயலாமல் மருத்துவமனை நிர்வாகங்கள் திணறி வருகின்றன.

குறிப்பாக லண்டன் நகரில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் அந்த நகரின் ஆரம்பப் பாடசாலைகளை மூட அரசு முடிவெடுத்துள்ளது.

அதேபோன்று அவசரகால மருத்துவனைகளை அமைக்கும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

 

Mon, 01/04/2021 - 12:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை